/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நடமாடும் மருத்துவ வாகனங்கள் புறப்பாடு
/
மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நடமாடும் மருத்துவ வாகனங்கள் புறப்பாடு
மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நடமாடும் மருத்துவ வாகனங்கள் புறப்பாடு
மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நடமாடும் மருத்துவ வாகனங்கள் புறப்பாடு
ADDED : டிச 05, 2024 07:07 AM

விழுப்புரம்: பெஞ்சல் புயலை யொட்டி, வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் 60 நடமாடும் மருத்துவ வாகனம் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
விழுப்புரம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார்.
அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர் ஆகியோர் முன்னிலையில் 60 நடமாடும் மருத்துவ வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி கூறியதாவது,
பெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தமிழக முதல்வர் உத்தரவின் பேரில், உடனே வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடக்கிறது. பல பகுதிகளில் உள்ள மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மழைநீர் வெளியேற்றப்பட்ட பகுதிகளில் மழைநீரால் ஏற்படும் நோய் தொற்றிலிருந்து மக்களை காக்கும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் 60 நடமாடும் மருத்துவ வாகனம் பாதித்த பகுதிகளுக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் மாவட்டத்தில் மழையால் பாதித்த பகுதிகளுக்கு சென்று மருத்துவ முகாம் நடத்தி பொதுமக்கள், குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்டத்தில் பெஞ்சல் புயலை யொட்டி, வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு மதுரை மாவட்டத்தில் இருந்து கூட்டுறவு துறை சார்பில் வந்த வெள்ள நிவாரண அத்தியவாசிய பொருட்களை, பொதுமக்களுக்கு வழங்குவதற்காக அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர் முன்னிலையில், கலெக்டர் பழனி தலைமையில் அனுப்பி வைத்தனர்.
பொதுப்பணி துறை (நீர்வளம்) கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசகம், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக், ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் பொன்னையா, கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.