/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துணை முதல்வர் பிறந்த நாள் தி.மு.க., அன்னதானம் வழங்கல்
/
துணை முதல்வர் பிறந்த நாள் தி.மு.க., அன்னதானம் வழங்கல்
துணை முதல்வர் பிறந்த நாள் தி.மு.க., அன்னதானம் வழங்கல்
துணை முதல்வர் பிறந்த நாள் தி.மு.க., அன்னதானம் வழங்கல்
ADDED : நவ 28, 2025 05:12 AM

செஞ்சி: செஞ்சியில் கூட்ரோட்டில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நகர செயலாளர் கார்த்திக் தலைமை தாங்கினார். இளைஞரணி அமைப்பாளர் அன்புச்செல்வன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்கள் ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி ஆகியோர் அன்னதானத்தை துவக்கி வைத்தனர்.
மேல்மலையனுார் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், பேரூராட்சி துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல்மணி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.