/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வளர்ச்சி பணிகள் குறித்து துணை முதல்வர் ஆய்வு! திட்டங்கள் முழுமையாக சென்றடைய வேண்டுகோள்
/
வளர்ச்சி பணிகள் குறித்து துணை முதல்வர் ஆய்வு! திட்டங்கள் முழுமையாக சென்றடைய வேண்டுகோள்
வளர்ச்சி பணிகள் குறித்து துணை முதல்வர் ஆய்வு! திட்டங்கள் முழுமையாக சென்றடைய வேண்டுகோள்
வளர்ச்சி பணிகள் குறித்து துணை முதல்வர் ஆய்வு! திட்டங்கள் முழுமையாக சென்றடைய வேண்டுகோள்
ADDED : நவ 06, 2024 10:37 PM

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்தி வரும் அனைத்து அரசு துறைகளின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, துணை முதல்வர் உதயநிதி தலைமை தாங்கினார். இதில், முதல்வரின் சிறப்பு திட்டங்களை முதல்வரின் முகவரி, மக்களோடு முதல்வர், நீங்கள் நலமா ஆகிய திட்டங்களின் கீழ் பட்டா மாற்றம், சான்றிதழ்கள், நிவாரண உதவிதொகை கோரி மக்களிடம் வந்த மனுக்கள் மீதான நடவடிக்கைகளை, துணை முதல்வர் ஆய்வு செய்தார். வளர்ச்சி திட்ட பணிகள், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகள், குடிநீர் திட்ட பணிகள், சாலை பணிகள் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு செய்தார்.
மக்களிடம் பெற்ற மனுக்களின் நிலுவைக்கான காரணம் குறித்து, தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்களிடம் துணை முதல்வர் கேட்டறிந்தார். மனுக்கள் தள்ளுபடி செய்தால் அதற்கான காரணம் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து, மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது ஆய்வு செய்யப்பட்டது.
இதனடிப்படையில் நல்லாளம் ஊராட்சியை சேர்ந்த ஆரோக்கியதாஸ், வி.மாத்துார் ஊராட்சி மலர் ஆகியோரின் கோரிக்கை மனுக்களை பார்வையிட்டு, மனுதாரர்களை மொபைல் மூலம் தொடர்பு கொண்ட துணை முதல்வர், விபரங்களை கேட்டறிந்ததோடு நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இது போன்று தொடர்ந்து விண்ணப்பதாரர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதோடு, அலுவலர்களும் தங்களுக்கு வரும் மனுக்கள் மீது உரிய கவனத்தோடு, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தினார்.
பின், துணை முதல்வர் உதயநிதி கூறியதாவது,
மக்களின் கோரிக்கை மனுக்களை காகிதங்களாக பார்க்காமல், மக்களின் வாழ்க்கையாக பார்க்க வேண்டும் என நமது முதல்வர் அடிக்கடி குறிப்பிடுவார். விழுப்புரம் மாவட்டம் கிராம ஊராட்சிகள் அதிகம் உள்ள மாவட்டமாகும். இங்கு, விவசாயத்தையும், விவசாயம் சார்ந்த தொழிலையும் செய்பவர்கள் தான் அதிகம் உள்ளனர். இந்த மக்களுக்கு தேவையான கோரிக்கைகளை, பணிகளை செய்து தருவதை அரசு அலுவலர்கள் தங்களின் முக்கிய கடமையாக மேற்கொள்ள வேண்டும்.
பெண்கள் முன்னேற முதல்வர், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அனைத்து துறை அலுவலர்களும், ஒருங்கிணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தை திருமணங்கள் ஒன்றுகூட நடைபெறாத மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்தை மாற்ற வேண்டும். அனைத்து திட்டங்கள் மூலம் தகுதியுள்ள அனைவரும் பயன்பெற அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையின் அடிப்படையில் நமது முதல்வர், தலைமையிலான திராவிட மாடல் அரசு விடியல் பயணம், நான் முதல்வர், புதுமை பெண், தமிழ் புதல்வன் உட்பட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டங்கள் மக்களை முழுமயைாக சென்றடைய அரசு அலுவலர்களாகிய நீங்கள் தான் அரசிற்கும், மக்களுக்கும் பாலமாக செயல்பட வேண்டும் என கூறினார்.
இதில், அமைச்சர் பொன்முடி, எம்.பி.,க்கள் ரவிக்குமார் ,தரணிவேந்தன் எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், லட்சுமணன், மணிக்கண்ணன், அன்னியூர் சிவா, சிவக்குமார், சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலாளர் தாரேஸ் அகமது, கலெக்டர் பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.