/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துணை முதல்வர் வருகை: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
/
துணை முதல்வர் வருகை: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
துணை முதல்வர் வருகை: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
துணை முதல்வர் வருகை: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
ADDED : டிச 04, 2025 05:30 AM

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டத்திற்கு துணை முதல்வர் உதயநிதி வருகைக்காக முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் வரும் 6ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை துணை முதலமைச்சர் உதயநிதி திறந்து வைத்து, சூர்யா கல்லுாரியில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.இதற்காக முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பணிகளை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி, அன்னியூர் சிவா எம் .எல் .ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அப்துல் மாலிக் ஆகியோர் பார்வையிட்டனர்.
ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி, பொதுக்குழு ஏழுமலை, ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, வேம்பி ரவி, ஜெயபால்,கில்பர்ட் ராஜ், கல்பட்டு ராஜா, முருகன், திட்டக்குழு தலைவர் முருகன், ஒன்றிய தலைவர் முரளி,நகர செயலாளர் நைனா முகம்மது, துணைச் செயலாளர் சுரேஷ்குமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தினகரன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் சுந்தர் ,மாணவரணி யுவராஜ்,சைபுல்லா உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

