/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் துணை பொதுச்செயலாளர் பொன்முடி நம்பிக்கை
/
தி.மு.க., கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் துணை பொதுச்செயலாளர் பொன்முடி நம்பிக்கை
தி.மு.க., கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் துணை பொதுச்செயலாளர் பொன்முடி நம்பிக்கை
தி.மு.க., கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் துணை பொதுச்செயலாளர் பொன்முடி நம்பிக்கை
ADDED : பிப் 17, 2024 06:33 AM

விழுப்புரம் : 'லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணி, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்' என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் பொன்முடி கூறினார்.
விழுப்புரத்தில் நேற்று இரவு தி.மு.க., சார்பில், லோக்சபா தொகுதி பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.
முன்னதாக கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட தி.மு.க., துணை பொதுசெயலாளர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, தமிழகத்தில் மண்டலம் வாரியாக அனைத்து லோக்சபா தொகுதிகளுக்கான பிரசார ஏற்பாடு கூட்டம், இன்று (நேற்று) துவங்கி 18ம் தேதி வரை நடக்கிறது.
கடந்த 10 ஆண்டுகால மத்திய பா.ஜ., அரசின் தவறான கொள்கைகள், அதனால் மக்கள் அடைந்த துயரம், கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் குறைபாடுகளையும், தி.மு.க., அரசின் 2 ஆண்டு சாதனைகளையும், பொது மக்களிடம் எடுத்துச்சொல்ல தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள், இளைஞரணியினர், மாணவரணியினர், கிளை நிர்வாகிகளுக்கு பயிற்சியளிக்கும் பிரசார கூட்டமாக நடத்தப்படுகிறது.
விழுப்புரம் லோக்சபா தொகுதிக்கு இன்று (நேற்று) பிரசார கூட்டம் நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் 5 தொகுதிக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1 தொகுதிக்கும் இக்கூட்டம் நடக்கிறது.
இக்கூட்டத்தில் கேட்டறிந்த தகவல்களை, கட்சியினர் கிராமங்களில், மக்களிடம் பிரசாரம் செய்ய அறிவுறுத்தப்படும். வரும் லோக்சபா தேர்தலில் நிச்சயம் 40 தொகுதியிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும் நம்பிக்கை உள்ளது. அதற்கான பணிகளை மேற்கொள்வதே இக்கூட்டத்தின் நோக்கம்.
இவ்வாறு பொன்முடி கூறினார்.
எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், இளைஞரணி அமைப்பாளர் தினகரன், நகர செயலாளர் சக்கரை, ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.