/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு விரிவான ஏற்பாடு: கலெக்டர் தகவல்
/
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு விரிவான ஏற்பாடு: கலெக்டர் தகவல்
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு விரிவான ஏற்பாடு: கலெக்டர் தகவல்
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு விரிவான ஏற்பாடு: கலெக்டர் தகவல்
ADDED : ஜன 08, 2024 05:15 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், பொங்கல் பரிசு பெற ரேஷன் கார்டுதாரர்களுக்கு, டோக்கன் வழங்கப்படும் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
தமிழக அரசு உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும், தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு மற்றும் 1000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது.
இதற்காக ரேஷன்கடை பணியாளர்கள், கூட்டுறவுத்துறை ஊழியர்கள் மூலம், 7ம் தேதி முதல் நாளை 9ம் தேதி வரை பரிசு பொருட்கள் வழங்கும் நாள், நேரம் குறிப்பிட்டு, டோக்கன் வழங்கப்படும்.
பொங்கல் பரிசு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் குறித்து, விழுப்புரம் கலெக்டர் அலுவலக தொலைபேசி எண் 04146- 229884 மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலக தொலைபேசி எண் 04146 - 229854 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும், தாலுகா அளவில் வட்ட வுழங்கல் அலுவலரை தொடர்பு கொண்டும், புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.