ADDED : ஆக 13, 2025 12:16 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடந்தது.
விழுப்புரம் மாவட்டசேர்மன் ஜெயச் சந்திரன், விக்கிரவாண்டி ஒன்றியம் கஸ்பாகாரணை ஏரிக்கரை நீர் வரத்து வாய்க்காலில் கட்டப்பட்டு வரும் பால பணிகள்; புதிய காலனி பகுதியில் பழுத டைந்துள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி; பொன்னங்குப்பத்தில் இருளர் குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டுவரும், 5 புதிய குடியிருப்புகள் பணி; சாலை வசதி புதியதாக அமைக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்தல்; பழைய மேலக்கொந்தை காலனியில் பழுதடைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி; உலகலாம் பூண்டியில் சாலை வசதி; ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, பி.டி.ஓ., க்கள் சையது முகமது, நாராயணன், ஒன்றிய கவுன்சிலர் ரவிச்சந்திரன், ஒன்றிய தலைவர் முரளி, ஊராட்சி மன்ற தலைவர் விசாலாட்சி வேலு, மாவட்ட பிரநிதி வேல் முருகன், நிர்வாகிகள் மணிவண்ணன், சுதாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

