/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் கலந்தாய்வு
/
வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் கலந்தாய்வு
ADDED : ஆக 23, 2025 05:03 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
கூடுதல் கலெக்டர் பத்மஜா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், குடியிருப்பு வீடு கட்டும் திட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்களிடம் கலந் தாய்வு நடைபெற்றது. துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.