/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மகளிர் கல்லுாரியில் மேம்பாட்டு பயிற்சி
/
மகளிர் கல்லுாரியில் மேம்பாட்டு பயிற்சி
ADDED : டிச 06, 2025 06:51 AM

விழுப்புரம்: விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில், ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் கலைமதி தலைமை தாங்கினார். துணை முதல்வர் செல்வி வரவேற்றார். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு திட்ட மேலாளர் நல்லதம்பி சிறப்புரையாற்றினார். சென்னை, மகேந்திரா நிறுவனத்தின் வேலை வாய்ப்பு கூட்டமைப்பாளர் மாயவன், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக வணிக நிர்வாகத்துறை விரிவாக்க மைய பேராசிரியர் சுஜாதா, சென்னை வி.ஐ.டி., மற்றும் வேலுார் பல்கலைக் கழக இணைப்பேராசிரியர் மணிமேகலை, சென்னை கன்சல்டன்சி சர்வீஸ் தெய்வசிகாமணி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
பயிற்சியில் பங்கேற்ற விழுப்புரம், கடலுார், புதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
மாணவியர் புல முதன்மையர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

