/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ.1.8 கோடியில் வளர்ச்சிப்பணி: ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்
/
ரூ.1.8 கோடியில் வளர்ச்சிப்பணி: ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்
ரூ.1.8 கோடியில் வளர்ச்சிப்பணி: ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்
ரூ.1.8 கோடியில் வளர்ச்சிப்பணி: ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்
ADDED : ஜன 13, 2024 03:35 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் 1 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விக்கிரவாண்டி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய சேர்மன் சங்கீதஅரசி ரவிதுரை தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் ஜீவிதா ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, முபாரக் அலி பேக் முன்னிலை வகித்தனர். உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபாலன் வரவேற்றார். கணக்காளர் தணிகைவேல் தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில், ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வளர்ச்சி திட்டப் பணிகளான குடிநீர், சாலை வசதிகள் செய்திட 1 கோடியே 8 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஓன்றிய பொறியாளர்கள் இளையராஜா, நடராஜன், முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இளநிலை உதவியாளர் காமராஜ் நன்றி கூறினார்.