ADDED : ஜூன் 26, 2025 11:47 PM
செஞ்சி: வல்லம் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின்  முன்னேற்றக் குறித்து கேட்டறிந்தார்.  திட்ட பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து கொங்கரப்பட்டு - மணியம்பாட்டு இடையே சங்கராபரணி ஆற்றில் 9.10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை பார்வையிட்டார்.
கொங்கரப்பட்டு கிராமத்தில் மகளிர்  சுய உதவிக் குழுவினர் சாகுபடி செய்துள்ள அவரி பயிர்களையும், அதை பதப்படுத்தி சாயம் மற்றும் டை தயாரிக்கும் முறையையும் பார்வையிட்டார்.
பின், தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு முற்றிலும் 100 சதவீதம் மானியத்தில் தென்னங்கன்றுகளை வழங்கினார்.
ஆய்வின் போது ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் அன்பழகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரேமா லதா, தோட்டக்கலை உதவி இயக்குநர் கவுதம், பி.டி. ஓ.,க்கள் ராமதாஸ், இளங்கோவன், தோட்டக்கலை அலுவலர் சபுராபேகம், ஊராட்சி தலைவர் காயத்ரி மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

