/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு
/
வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு
ADDED : மார் 26, 2025 03:59 AM

செஞ்சி : செஞ்சி ஒன்றித்தில் கொணலுார், கோணை, சிட்டாம்பூண்டி ஊராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேற்று ஆய்வு செய்தார்.
ஊராட்சியில், 19 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க பயனாளிகளை சந்தித்து உண்மைத் தன்மை குறித்து கேட்டறிந்தார். நீர் தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுவதை ஆய்வு செய்து, குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யும் நாள், குளோரினேஷன் செய்யும் நாளை பதிவு செய்ய அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளை பார்வையிட்டார்.
சிட்டாம்பூண்டி ஊராட்சியல் 13.71 கோடி ரூபாய் மதிப்பில் 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 3 தளங்களுடன் கட்டப்பட்டு வரும் கட்டடத்தை பார்வையிட்டார்.
பிரதான சாலையில் இருந்து கல்லுாரிக்கு வருவதற்கான சாலை வசதிகளை கேட்டறிந்தார். கோணை ஊராட்சியில் பி.எம்.ஜென்மன் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டார்.
ஆய்வின்போது, பொதுப்பணித்துறை தொழில் நுட்ப பிரிவு உதவி செயற் பொறியாளர் மகேஷ்பாபு, செஞ்சி தாசில்தார் ஏழுமலை, பி.டி.ஓ.,க்கள் நடராஜன், பிரபா சங்கர், கொணலுார் ஊராட்சி தலைவர் சுபா குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.