/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானுார் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு
/
வானுார் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு
வானுார் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு
வானுார் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு
ADDED : அக் 16, 2024 09:39 PM

வானுார்: வானுார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.
பெரும்பாக்கம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் பழனி நேற்று பார்வையிட்டார்.
ஒவ்வொரு திட்டப்பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பெரும்பாக்கம் ஊராட்சியில், ஏ.ஜி.நகர் பகுதியில், வீடுதோறும் வழங்கப்படும் குடிநீர் சுகாதாரமாக உள்ள என வீடுகளுக்கு சென்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
பின் கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ. 3.53 லட்சம் மதிப்பீட்டில் பயனாளி கட்டி வரும் வீட்டை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதே பகுதியில், அயோத்தி தாசர் பண்டிதர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, வானுார் பி.டி.ஓ., தேவதாஸ், வானுார் தாசில்தார் நாராயண மூர்த்தி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.