/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெவ்வேறு பிரச்னை: உண்ணாவிரதம், தீக்குளிக்க முயற்சி கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு
/
வெவ்வேறு பிரச்னை: உண்ணாவிரதம், தீக்குளிக்க முயற்சி கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு
வெவ்வேறு பிரச்னை: உண்ணாவிரதம், தீக்குளிக்க முயற்சி கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு
வெவ்வேறு பிரச்னை: உண்ணாவிரதம், தீக்குளிக்க முயற்சி கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு
ADDED : பிப் 13, 2024 05:16 AM

விழுப்புரம்: வீட்டுமனைப் பட்டா முறைகேடு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டி உண்ணாவிரதம் இருக்க முயன்ற முதியவராலும், வீட்டை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கோரியும், தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியாலும் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
விக்கிரவாண்டி அடுத்த திருநந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 75; இவர், நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலக குறைகேட்புக் கூட்டத்தில் மனு அளிக்க வந்தார். அவர் திடீரென, சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக, பதாகையுடன் அமர்ந்தார்.
தாலுகா சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் கூறுகையில், 'எனது பாட்டி, எங்களுக்கு தானமாக வழங்கிய பூர்வீக இடத்தில் தான் வீடு கட்டியிருந்தேன்.
இந்நிலையில் திடீரென எங்களது வீடு தீப்பற்றி எரிந்து சேதம் அடைந்தது.
இதனால் அருகிலுள்ள எங்களது இடத்தில் தற்காலிகமாக வீடு கட்டி வசித்து வருகிறேன். இந்நிலையில், எனது வீட்டின் அருகே உள்ள வருவாய்த் துறையில் பணியில் உள்ள ஒருவர், வீட்டு மனை நில அளவை செய்தபோது, எரிந்துபோன எனது வீட்டின் இடத்தை, ஒரு பொது சந்து என தவறாக குறிப்பிட்டு பட்டா மாற்றம் செய்துள்ளார்.
இதனால், எனது இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும்.
போலி பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை' என்றார். பின், போலீசார், அவரை சமாதானப்படுத்தி, கலெக்டரிடம் மனு அளிக்க செய்து, அனுப்பி வைத்தனர்.
மூதாட்டியால் பரபரப்பு
அரியலுார் திருக்கை அடுத்த டட்நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் தெரசா கபரியேல், 60; இவர், நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தவர், திடீரென தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
போலீசார், அவரை தடுத்து விசாரித்தனர். அப்போது அவர் கூறுகையில், எங்கள் கிராமத்தில் உள்ள சிலர், எனது வசிப்பிடத்தை பறித்துக்கொண்டு, தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். கடந்தாண்டு ஜூன் 1ம் தேதி, எனது வீட்டை இடித்து தள்ளி விட்டனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி மனு கொடுத்தபோது, கெடார் போலீசார் இரு தரப்பையும் அழைத்து விசாரணை செய்தனர். பிறகு நடவடிக்கையில்லை. இது தொடர்பாக, விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் அலைகழித்து வருகின்றனர்.
பட்டா நிலத்தில் உள்ள எனது வீட்டை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
போலீார் அறிவுறுத்தியததன் பேரில் கலெக்டரிடம் மனு அளித்துச் சென்றார்.