/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி., ஆய்வு
/
சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி., ஆய்வு
ADDED : நவ 21, 2024 12:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி., ஆய்வு செய்தார்.
செஞ்சியை அடுத்த சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., திஷா மிட்டல் ஆய்வு செய்தார். அப்போது, காவல் நிலையத்தில் பராமரித்து வரும் கோப்புகளை ஆய்வு செய்தார். வழக்கு சம்பந்தமான கோப்புகளை பார்வையிட்டு அதுகுறித்த தற்போதைய நிலவரங்களை கேட்டறிந்தார். வழக்கு விசாரணையை உடனுக்குடன் முடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து அருகில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதியை பார்வையிட்டார். ஆய்வின் போது இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

