/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொரவி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 'தினமலர் -- பட்டம்' வினாடி வினா போட்டி

ADDED : நவ 26, 2025 08:13 AM

விக்கிரவாண்டி: 'தினமலர் -- பட்டம்' இதழ், ஆச்சாரியா கல்விக்குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் பரிசு வெல்' வினாடி வினா போட்டி, தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்தது.
பள்ளியில் நடந்த முதற்கட்ட போட்டியில் 100கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ மாணவிகள் தேர்வு செய்து 8 குழுக்களாக பிரித்து 2 சுற்று போட்டி நடந்தது.
பள்ளி உதவி தலைமையாசிரியை மகேஸ்வரி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ராஜாம்பாள் சுப்ரமணி, ஊராட்சி தலைவர் சங்கர், பட்டதாரி ஆசிரியை ராணி முன்னிலை வகித்தனர்.
8ம் வகுப்பு மாணவர்கள் சக்தீஸ்வரன், தீபன் ராஜ் முதலிடமும், மாணவிகள் சத்ரியா, ராகினி இரண்டாமிடமும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தொரவி பி.கே.எஸ்., பவுண்டேஷன் நிறுவனர் சுப்ரமணி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.
போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.