/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதிய வழித்தட பஸ்கள் துவக்க விழா
/
புதிய வழித்தட பஸ்கள் துவக்க விழா
ADDED : நவ 26, 2025 08:14 AM

விழுப்புரம்: அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் மண்டலம் சார்பில் புதிய மற்றும் 6 புனரமைக்கப்பட்ட வழித்தட பஸ்கள் துவக்க விழா நடந்தது.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, எம்.எல்.ஏ.,க்கள் பொன்முடி, மஸ்தான், லட்சுமணன் ஆகியோர் தலைமை தாங்கி, 7 புதிய மற்றும் 6 புனரமைக்கப்பட்ட வழித்தட பஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
புதிய மகளிர் விடியல் பயண நகர பஸ்கள் திருக்கோவிலுாரில் இருந்து வீரபாண்டி, கலந்தல் வழியாக அத்தியூர் திருக்கைக்கும், விழுப்புரத்தில் இருந்து தும்பூர், கஞ்சனுார், நேமூர் வழியாக பிடாரிப்பட்டிற்கும், விழுப்புரத்தில் இருந்து வல்லம், நாட்டார்மங்கலம், தீவனுார் வழியாக திண்டிவனத்திற்கும், செஞ்சியில் இருந்து வல்லம், நாட்டார்மங்கலம், தீவனுார் வழியாக திண்டிவனத்திற்கும், செஞ்சியில் இருந்து செவலப்புரை, வடபாலை வழியாக மேல்மலையனுாருக்கும், திண்டிவனத்தில் இருந்து தீவனுார், நாட்டார்மங்கலம், வல்லம் வழியாக செஞ்சிக்கும், திண்டிவனத்தில் இருந்து சலவாதி மேல்பாட்டை, சாரம் வழியாக ஒலக்கூருக்கும் செல்கிறது.
புனரமைக்கபட்ட வழித்தட பஸ்களில் 4 பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம் வழியாக திருச்சிக்கும், இரு பஸ்கள் புதுச்சேரியில் இருந்து மரக்காணம், கல்பாக்கம் வழியாக கோயம்பேடு வரை இயக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ஜெகதீஷ், துணை மேலாளர்கள் சிவக்குமார், அறிவண்ணல், உதவி மேலாளர் சிவராஜன், கிளை மேலாளர்கள் முருகன், சிவராஜன், ரங்கராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

