/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி
/
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி
ADDED : டிச 06, 2025 06:48 AM

விழுப்புரம்: 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல்; பரிசு வெல்' வினாடி வினா போட்டி, விழுப்புரம் த நியூ ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்தது.
போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதில், 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, 8 குழுக்களாக பிரித்து, 2 சுற்றுகளாக போட்டி நடந்தது.
பள்ளி நிர்வாக அதிகாரி எமர்சன் ராபின் தலைமை தாங்கினார். கல்வி அலுவலர் சுகன்யா ராபின், பள்ளி முதல்வர் ஸ்டீபன், தலைமை ஆசிரியர் செண்பகலட்சுமி முன்னிலை வகித்தனர். போட்டியில், 9ம் வகுப்பு மாணவர்கள் ஆதவன், மோனிஷ் முதலிடம் பிடித்தனர். 8ம் வகுப்பு மாணவிகள் ஜெயஸ்ரீ, ஹரிணி இரண்டாம் இடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் ராஜா, திவ்யா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
எம்.ஆர்.ஐ.சி.ஆர்.சி., உயர்நிலைப் பள்ளி விழுப்புரம் எம்.ஆர்.ஐ.சி.ஆர்.சி., உயர்நிலைப் பள்ளியில் நடந்த போட்டிக்கு, பள்ளி தாளாளர் செல்வநாதன் தலைமை தாங்கினார். விழுப்புரம் ஆடிட்டர் ராஜேஷ்குமார், தலைமை ஆசிரியர் ஆரோக்கிய ஜெசிந்தாமேரி முன்னிலை வகித்தனர்.
போட்டியில், 8ம் வகுப்பு மாணவர்கள் தினேஷ், சஞ்சய் முதலிடம் பிடித்தனர். 8ம் வகுப்பு மாணவிகள் யோஜனா, தேவதர்ஷினி இரண்டாம் இடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

