/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் போலீசார் தீவிர சோதனை
/
இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் போலீசார் தீவிர சோதனை
இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் போலீசார் தீவிர சோதனை
இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் போலீசார் தீவிர சோதனை
ADDED : டிச 06, 2025 06:49 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் டிசம்பர் 6ம் தேதி, பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று 6ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதனையொட்டி, விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், அசம்பாவிதம் நிகழாமல் தடுக்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எஸ்.பி., சரவணன் உத்தரவின் பேரில், நேற்று மாலை முதல் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம், விக்கிரவாண்டி உட்கோட்டங்களில் போலீசார் முக்கிய இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், நாசவேலை தடுப்பு பிரிவு போலீசார், சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில், மோப்ப நாய் ராணி உதவியுடன், விழுப்புரம் ரயில் நிலைம், புதிய பஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வாகன நிறுத்துமிடங்கள், வழிபாட்டுத் தலங்களில், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

