/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துணை முதல்வர் உதயநிதிக்கு தி.மு.க.,வினர் வரவேற்பு
/
துணை முதல்வர் உதயநிதிக்கு தி.மு.க.,வினர் வரவேற்பு
துணை முதல்வர் உதயநிதிக்கு தி.மு.க.,வினர் வரவேற்பு
துணை முதல்வர் உதயநிதிக்கு தி.மு.க.,வினர் வரவேற்பு
ADDED : டிச 06, 2025 06:49 AM

செஞ்சி: செஞ்சிக்கு வருகை தந்த துணை முதல்வர் உதயநிதிக்கு தி.மு.க., மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தி.மு.க., விழுப்புரம் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட செஞ்சி சட்டசபை தொகுதியைச் சேர்ந்த கிளைச் செயலாளர், பேரூ ராட்சி வார்டு செயலாளர்கள், ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை 6:00 மணிக்கு ஊரணிதாங்கல் சஞ்சனா பேலசில் நடந்தது .
இதில் பங்கேற்க வருகை தந்த துணை முதல்வர் உதயநிதிக்கு செஞ்சி பயணியர் விடுதி எதிரே மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, ஒன்றிய சேர்மன்கள் செஞ்சி விஜயகுமார், வல்லம் அமுதா ரவிக்குமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி, இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், நகர செயலா ளர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

