/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'தினமலர் - பட்டம்' இதழ் படித்தால் மாணவர்கள் உயரத்தில் பறக்கலாம் முத்துசரவணன் 'அட்வைஸ்'

ADDED : அக் 16, 2025 11:35 PM

விழுப்புரம்: 'தினமலர் - பட்டம்' இதழ் இருளை அகற்றி வெளிச்சத்தை தருகிறது' என விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நிர்வாக அறங்காவலர் முத்துசரவணன் பேசினார்.
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி துவக்க விழாவில் அவர் பேசியதாவது:
'தினமலர்' நாளிதழ் குழுமத்துடன் இணைந்து நாங்களும், நகர பகுதிகளில் பள்ளிகளுக்கு மட்டுமின்றி கிராமப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் 'தினமலர் - பட்டம்' இதழை சேர்த்துள்ளோம். இந்த 'பட்டம்' இதழால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர். 'பட்டம்' இதழ் இருளை அகற்றி வெளிச்சத்தை தருகிறது. பட்டம் என்றால் உயரத்தில் பறப்பது ஆகும். ஆனால், இந்த 'பட்டம்' இதழை மாணவர்கள் பயின்றால் உயரத்தில் பறக்கலாம். வாசிப்பு திறனையும் மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு முத்துசரவணன் பேசினார்.