/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'தினமலர் -பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி
/
'தினமலர் -பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி
ADDED : டிச 24, 2024 06:18 AM

விழுப்புரம்: விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி மற்றும் கீழ்ப்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், புதுச்சேரி 'தினமலர்-பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்வி குழுமம் சார்பில், பதில் சொல்: பரிசு வெல், வினாடி வினா போட்டி நடந்தது.
பூந்தோட்டம் நகராட்சி பள்ளியில் நடந்த வினாடி வினா போட்டியில் 100 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். பிறகு அதில் 16 மாணவ, மாணவிகள் தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, 2 சுற்றுகளாக போட்டி நடந்தது.
தலைமை ஆசிரியர் முருகன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்த போட்டியில் 9ம் வகுப்பு மாணவர்கள் பாலாஜி, கிஷோர் அணி முதலிடத்தையும், 9ம் வகுப்பு மாணவர்கள் லட்சுமிநாராயணன், மாதேஷ் அணி இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.
கீழ்ப்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், நடந்த வினாடி வினா போட்டியில் 100 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அவர்களில் 16 மாணவ, மாணவிகள் தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரித்து, 2 சுற்றுகளாக போட்டி நடந்தது.
தலைமை ஆசிரியர் யமுனாபாய் தலைமை தாங்கினார். பொறுப்பு ஆசிரியர் நரசிங்கம் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்த போட்டியில் 9ம் வகுப்பு மாணவர் தர்ஷன், 8ம் வகுப்பு மாணவர் கோகுல் அணி முதலிடத்தையும், 9ம் வகுப்பு மாணவர்கள் ஹரிஹரன், பாலாஜி அணி இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.
இரு பள்ளிகளில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, விழுப்புரம் சரஸ்வதி கல்வி குழும பொருளாளர் சிதம்பரநாதன் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.