/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி
/
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி
ADDED : டிச 18, 2024 06:22 AM

விழுப்புரம் : புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து 'பதில் சொல் ; பரிசு வெல்' வினாடி வினா போட்டி விழுப்புரம் காமராஜர் நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடத்தியது.
போட்டியில் 100 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதில், 16 மாணவர்கள் தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு 2 சுற்றுகளாக போட்டி நடந்தது. தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
போட்டியில் பிளஸ் 2 மாணவர்கள் மோகன்ராஜ், முகமது அபுதர் அணி முதலிடத்தையும், பிளஸ் 2 மாணவர்கள் சந்திரபிரகாஷ், அஸ்வின்குமார் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சரஸ்வதி கல்வி குழுமம் பொருளாளர் சிதம்பரநாதன் பதக்கம், சான்றிழ் வழங்கினார். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
த நியூ ஜான்டூயிமெட்ரிக் பள்ளி
விழுப்புரம் த நியூ ஜான்டூயி மெட்ரிக் பள்ளியில் நடந்த போட்டிக்கு, பள்ளி முதல்வர் ஸ்டீபன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை செண்பகலட்சுமி முன்னிலை வகித்தார்.
போட்டியில் 8ம் வகுப்பு மாணவர்கள் புவிராம், அப்துல் பாசிக் அணி முதலிடத்தையும், 8ம் வகுப்பு மாணவர்கள் அரி பிரவீன், நித்யபிரியன் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் நிர்வாக அதிகாரி எமர்சன் ராபின் பதக்கம், சான்றிழ்களை வழங்கினார். போட்டியில் பங் கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.