/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா பேட்டி
/
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா பேட்டி
ADDED : டிச 22, 2024 07:37 AM

செஞ்சி : ஆலம்பூண்டி செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பட்டம் வினாடி-வினா போட்டி நடந்தது.
செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி செயின்ட ஜோசப் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் புதுச்சேரி 'தினமலர் -பட்டம் 'இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து பதில் சொல் பரிசு வெல் வினாடி வினா போட்டி நடந்தது.
இதில் 16 மாணவர்கள் கலந்து கொண்டனர். 8 குழுக்களாக பிரித்து வினாடி வினா போட்டி நடந்தது. போட்டிகளுக்கு தலைமையாசிரியர் கிரீன் மேரி சோபியா தலைமை தாங்கினார். இரண்டு சுற்றுகள் நடந்த போட்டியில் 7 ம் வகுப்பு மாணவர்கள் ரூபன், பரணி முதலிமும், 8 வகுப்பு மாணவர்கள் சோமேஷ், எபின் கிறிஸா பிளசியூஸ் ஆகியோர் இரண்டாமிடமும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தாளாளர் தெரேஸ்நாதன் கேடயம், பதக்கம் மற்றும் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கினர்.