/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கெடார் அரசு மகளிர் பள்ளியில் 'தினமலர் -பட்டம்' இதழ் வினாடி வினா
/
கெடார் அரசு மகளிர் பள்ளியில் 'தினமலர் -பட்டம்' இதழ் வினாடி வினா
கெடார் அரசு மகளிர் பள்ளியில் 'தினமலர் -பட்டம்' இதழ் வினாடி வினா
கெடார் அரசு மகளிர் பள்ளியில் 'தினமலர் -பட்டம்' இதழ் வினாடி வினா
ADDED : நவ 25, 2025 04:43 AM

கண்டாச்சிபுரம்: கெடார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தினமலர் - பட்டம் இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் சார்பில் பதில் சொல் பரிசு வெல் வினாடி வினா போட்டி நடந்தது.
கெடார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டியில்100க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.
அதில், 16 மாணவிகளைத் தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரித்து, 2 சுற்று போட்டி நடந்தது. தலைமை ஆசிரியர் பொன்முடி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் சக்கீனா பீவி, எலிசா முன்னிலை வகித்தனர்.
பிளஸ் 1 மாணவிகள் மேஷினி, சிவப்பிரியா முதலிடம் பிடித்தனர். ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் ஹன்சிகா, ஆர்த்தி இரண்டாமிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சரஸ்வதி கல்வி குழுமம் தாளாளர் ராஜசேகரன், பொருளாளர் சிதம்பரநாதன், சி.பி.எஸ்.இ., பள்ளி தாளாளர் முத்துசரவணன் ஆகியோர் கேடயம் வழங்கினர்.
போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் கலைச்செல்வி ஏற்பாடுகளை செய்திருந்தார்.