ADDED : நவ 25, 2025 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் வட்டார பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் ஜிப்மர் மருத்துவமனை சார்பில் காச நோய் குறித்த விழிப்புணர்வு முகாம் வீடூரில் நடந்தது.
மயிலம் வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரி பிராகாஷ் வரவேற்றார். மருத்துவ அலுவலர் பாலாஜி மற்றும் நடமாடும் மருத்துவ குழு அலுவலர் தனலட்சுமிமேற்ப்பார்வையில் முகாம் நடந்தது.
வட்டார சுகாதார மேற்ப்பார்வையாளர் (பொறுப்பு) பாலகுமரன், சுகாதார ஆய்வாளர்கள் தமிழ்வானன், கதிரவன் மற்றும் காச நோய் முதுநிலை மேற்ப்பார்வையாளர் விஜயகாந்த் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள், கொசுப்புழு உற்பத்தி பரிசோதகர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

