/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'தினமலர்' நாளிதழ் வெற்றித் திருநாள் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து
/
'தினமலர்' நாளிதழ் வெற்றித் திருநாள் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து
'தினமலர்' நாளிதழ் வெற்றித் திருநாள் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து
'தினமலர்' நாளிதழ் வெற்றித் திருநாள் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து
ADDED : செப் 05, 2025 11:31 PM
விழுப்புரம்:'தினமலர்' நாளிதழ் திருவனந்தபுரத்தில் துவங்கி, திருநெல்வேலி, பின்னர் திருச்சி, தொடர்ந்து 1979ம் ஆண்டு சென்னை மற்றும் இதர மாவட்டங்கள் என வளர்ச்சியை எட்டித் தொட்டிருக்கிறது என பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்த அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் என்னைப் பேட்டி எடுத்து செய்தியை வெளியிட்டுத் தமிழக மக்களிடையே பிரபலப்படுத்தியது 'தினமலர்'நாளிதழ்.கிராமப்புற பள்ளிகளின் குறைபாடுகளை 'மாணவர் பக்கம்' என்ற பெயரில் செய்தி வெளியிட்டது.
இதனால் பள்ளிகள் சீரடைந்தன.வன்னியர் சங்கத்தை துவக்கிய காலத்தில், உறுதுணையாகத் தொடர்ந்து செய்திகளை வெளியிட்ட 'தினமலர்' எங்கள் நன்றிக்குரியது.
தனக்கே உரித்தான தனிப் பாணியிலிருந்து எப்போதுமே வழுவாது, அந்தந்த தலைவருக்கான முக்கியத்துவத்தை இம்மியளவும் குறைபடாதவாறு செய்திகளை வெளியிட்டு வருகிறது. ரயிலையே பார்த்திராத நாகர்கோவில் மக்களுக்கு, அந்த பலனைப் பெற்று தருவதில், டி.வி.ராமசுப்பையரின் பணி மகத்தானது.அவரதுமகனும் ஆசிரியருமான இரா.கிருஷ்ணமூர்த்தி,பண்டைய தமிழ்ப் பெருமையின் வரலாற்றை ஒளிரச் செய்தார்.
தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை பெரியார்,விடுதலை நாளிதழில் அறிமுகப்படுத்தினார். தினமலரோ, 1977ம் ஆண்டு இந்த சீர்திருத்த எழுத்துக்களை, அறிமுகப்படுத்தியது.
'டீக்கடை பெஞ்சு' என்ற பகுதியைத் தொடங்கி, வாசகத்தில் சூசகத்தைக் கலந்து எழுதி, தினம் தினம் 'தினமலர்' நாளிதழில் வெளியாகும் தகவல்கள் துல்லியமானவை. இதன் மூலம் முறைகேடுகள் மற்றும் குறைபாடுகள் நிவர்த்தியாகின்றன.
'தினமலர்' நாளிதழின் குடும்பத்தார் அனைவருமேஅர்ப்பணிப்புடன் செயல்பட்டு,மக்களின் தொண்டனாக பணியாற்றிடவாழ்த்துகிறேன்.