/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குயிலாப்பாளையம் பள்ளியில் 'தினமலர்-பட்டம்' வினாடி-வினா
/
குயிலாப்பாளையம் பள்ளியில் 'தினமலர்-பட்டம்' வினாடி-வினா
குயிலாப்பாளையம் பள்ளியில் 'தினமலர்-பட்டம்' வினாடி-வினா
குயிலாப்பாளையம் பள்ளியில் 'தினமலர்-பட்டம்' வினாடி-வினா
ADDED : ஜன 24, 2025 11:46 PM

வானுார் ; குயிலாப்பாளையம் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 'தினமலர்-பட்டம்' வினாடி-வினா போட்டி நடந்தது.
'தினமலர்- பட்டம்' இதழ் மற்றும் ஆச்சார்யா கல்வி குழுமம் இணைந்து நடத்தும் 'பதில் சொல் பரிசு வெல்' என்ற மெகா வினாடி-வினா போட்டி நடக்க உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க பள்ளி அளவிலான அணிகள் தேர்வு செய்யும் போட்டி ஆரோவில் அடுத்த குயிலாப்பாளையம் தனியார் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
இதில் 16 மாணவிகளை 8 குழுக்களாக பிரித்து இரண்டு சுற்றுகளாக போட்டி நடந்தது. இதில், பிளஸ் 1 மாணவிகள் திவ்யபாரதி, மோனிஷா முதலிடத்தையும், 8ம் வகுப்பு மாணவிகள் சுதேஷ்னா, அகல்யா இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் குணசீலன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் பிரகாஷ், ஆசிரியர்கள் ரமேஷ், வீரராகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் தினமலர் சார்பில் வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

