/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சின்னகரத்தில் பூ பல்லக்கு திருவிழா
/
சின்னகரத்தில் பூ பல்லக்கு திருவிழா
ADDED : ஜூலை 19, 2011 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : சின்னகரம் பொன்னியம்மன், மாரியம்மன் கோவிலில் ஆடி முதல் தேதியை முன்னிட்டு பூ பல்லக்கு விழா நடந்தது.செஞ்சி தாலுகா சின்னகரம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு பூ பல்லக்கு விழா நடந்தது.
அன்று காலை மாரியம்மன், பொன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் செய்தனர். பகல் 1 மணிக்கு அன்னதானம் செய்தனர்.இரவு 9 மணிக்கு பூபல்லக்கில் மாரியம்மன், பொன்னியம்மன் சாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து வாணவேடிக்கையும், நாடகமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை சின்னகரம் லாரி ஓட்டுநர்கள், உதவியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.