/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் திருவெண்ணெய்
/
இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் திருவெண்ணெய்
ADDED : ஜூலை 19, 2011 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நல்லூர் : பயங்கரவாதத்தை கண்டித்து இந்து முன்னணியினர் திருவெண்ணெய்நல்லூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்து முன்னணி ஒன்றிய தலைவர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் ஏழுமலை முன்னிலை வகித்தார். முன்னாள் நகர தலைவர் அரங்கநாதன் வரவேற்றார். மாநில பொதுசெயலாளர் பரமேஸ்வரன், நிர்வாகக்குழு உறுப்பினர் சனில்குமார், மாவட்ட தலைவர் பாலு பேசினர். பின்னர் நாட்டில் அதிகரித்துவரும் பயங்கரவாதத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். நகர பொதுச்செயலாளர் சிவராமன், செயலாளர் நாகராஜ், ஜெயபால், தேஜ்பால்சர்மா, பா.ஜ., சரவணன், ராமு உட்பட பலர் கலந்து கொண்டனர்.