/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கல்விச் சுற்றுலாவுக்கு சிறப்பு போட்டிகள்
/
கல்விச் சுற்றுலாவுக்கு சிறப்பு போட்டிகள்
ADDED : ஆக 23, 2011 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ, மாணவிகளை கல்விச்
சுற்றுலா அழைத்துச் செல்வதற்கான போட்டிகள் நடந்தது.விழுப்புரம் வட்டார வள
மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மேற்பார்வையாளர் கீதா தலைமை தாங்கினார்.
பூந்தோட்டம், மருத்துவமனை வீதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளிகளைச்
சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வில் பங்கேற்றனர். ஆசிரிய பயிற்றுனர்கள்
பீரித்தா, பரமேஸ்வரி, சுகன்யா, இந்திரா, மதிவண்ணன், மணிகண்டன், கலையரசி
உடனிருந்தனர். இதில் ஓவியம், பேச்சு, நடனம், பாடல் போட்டிகள் நடந்தன. இதில்
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பெங்களூரு, ராமேஸ்வரம் பகுதிகளுக்கு
அழைத்துச் செல்லப்படுகின்றனர்.