/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீட்டுமனைப் பட்டா கேட்டு மாற்றுத் திறனாளிகள் முற்றுகை
/
வீட்டுமனைப் பட்டா கேட்டு மாற்றுத் திறனாளிகள் முற்றுகை
வீட்டுமனைப் பட்டா கேட்டு மாற்றுத் திறனாளிகள் முற்றுகை
வீட்டுமனைப் பட்டா கேட்டு மாற்றுத் திறனாளிகள் முற்றுகை
ADDED : நவ 07, 2025 11:17 PM

செஞ்சி: செஞ்சி பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் வீட்டு மனைப் பட்டா கேட்டு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செஞ்சி பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 53 பேர் கடந்த 2023ம் ஆண்டு புதிய அலை மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் சந்தானம் தலைமையில் குறைகேட்புக் கூட்டத்தில் கலெக்டரிடம் வீட்டு மனைப் பட்டா கேட்டு மனு கொடுத்தனர். இவர்களுக்கு இதுவரை வீட்டு மனைப்பட்டா வழங்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் நேற்று செஞ்சி தாலுகா அலுவலகம் முன் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் சந்தானம் தலைமையில், வட்டார தலைவர் பூங்காவனம் முன்னிலையில் 25 பேர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, தாசில்தார் துரை செல்வனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக தாலுகா அலுவலகத்திற்குள் குடியிருக்கும் போராட்டமும், ஆதார் அட்டை, ரேஷன் கார்டுகளை தாசில்தாரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் என மாவட்ட துணைச் செயலாளர் தெரிவித்தார்.

