ADDED : நவ 07, 2025 11:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம்: மாநில கோகோ போட்டிக்கு தேர்வு பெற்ற கண்டாச்சிபரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
விழுப்புரம் வருவாய் மாவட்ட அளவில் ஓமந்துாரில் நடந்த கோகோ போட்டியில் கண்டாச்சிபுரம் மகளிர் பள்ளி மாணவிகள் அணி வென்றது. இதன் மூலம் மாநில அளவிலான 14 வயதிற்குட்பட்ட போட்டிக்கு மாணவிகள் தேர்வாகினர்.
இதனையடுத்து பள்ளியில் மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் ராஜீவி தலைமையில் பாராட்டு விழா நடந்தது. உதவி தலைமை ஆசிரியர்கள் சாமுண்டீஸ்வரி, ராஜாத்தி ஆகியோர் மாணவிகளின் விளையாட்டுத் திறன் மற்றும் எதிர்காலம் குறித்து பேசினர். உடற்கல்வி ஆசிரியர்கள் எழிலரசி புகழேந்தி, அசோக் மற்றும் மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

