/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காணை ஒன்றியத்தில் தி.மு.க., தேர்தல் பணிக்குழு ஆலோசனை
/
காணை ஒன்றியத்தில் தி.மு.க., தேர்தல் பணிக்குழு ஆலோசனை
காணை ஒன்றியத்தில் தி.மு.க., தேர்தல் பணிக்குழு ஆலோசனை
காணை ஒன்றியத்தில் தி.மு.க., தேர்தல் பணிக்குழு ஆலோசனை
ADDED : நவ 07, 2025 11:18 PM

விழுப்புரம்: விழுப்புரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, காணை கிழக்கு ஒன்றியத்தில், ஓட்டுச்சாவடி முகவர்கள் மற்றும் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கோனுார் கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு தி.மு.க., மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார். அப்போது, வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பணிகள் மற்றும் ஓட்டுச்சாவடி வாரியாக நடைபெற்று வரும் வாக்காளர் சேர்ப்பு பணிகள் குறித்து, நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, தற்போது நடந்து வரும் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணியின்போது, ஓட்டுச்சாவடி முகவர்கள் கவனமாக செயல்பட்டு, ஒரு வாக்காளர் கூட விடுபடாமல் கண்காணித்து, சேர்க்கும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
காணை கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சுந்தரமூர்த்தி, ரமணன், செல்வம், சிவசங்கர், ஜெயலட்சுமி, ஏழுமலை மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், கிளைச் செயலாளர்கள், ஓட்டுச்சாவடி முகவர்கள், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

