/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ராம்பாக்கத்தில் குரங்குகள் அட்டகாசம்
/
ராம்பாக்கத்தில் குரங்குகள் அட்டகாசம்
ADDED : நவ 07, 2025 11:18 PM
விழுப்புரம்: வளவனுார் அடுத்த ராம்பாக்கத்தில் அதிகரித்துள்ள குரங்குகளை பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வளவனுார் அடுத்த ராம்பாக்கம் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிகின்றன. பகல் நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து, பொருள்களை எடுத்து சேதப்படுத்துகிறது.
மாடியில் காய வைக்கும் தானியங்கள், பொருள்களை சாப்பிட்டு வருவதோடு, விரட்டும் பொது மக்களையும் கடிப்பதற்கு பாய்ந்து அச்சுறுத்தி, அட்டகாசம் செய்து வருவதாக, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
அதிகளவில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடிக்க வேண்டும் என கிராம மக்கள், பி.டி.ஓ., அலுவலகம் மற்றும் மக்களுடன் முதல்வர் முகாமிலும் புகார் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி வனத்துறை ஊழியர்கள் வந்து, 12 குரங்குகளை பிடித்து அகற்றினர்.
மீதமுள்ள 75க்கும் மேற்பட்ட குரங்குகள், வீடுகள், அரசு பள்ளிகளில் புகுந்து அட்டகாசம் செய்வதால், அதனையும் பிடித்து அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

