மாற்றுத்திறனாளிகள் சங்கம் மனு கொடுக்கும் போராட்டம்
மாற்றுத்திறனாளிகள் சங்கம் மனு கொடுக்கும் போராட்டம்
UPDATED : அக் 15, 2026 03:56 PM
ADDED : அக் 15, 2026 03:54 PM

விழுப்புரம்: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சர்வதேச வெண்கோல் தினத்தை முன்னிட்டு, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் நடந்த போராட்டத்திற்கு, மாநில துணை தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இதில், 100 சதவீதம் பார்வை இழப்பு உள்ள அனைத்து பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் இணைக்க வேண்டும்.
சமவேலை சமவாய்ப்பு என்ற கொள்கையின் அடிப்படையில் தனியார் கல்லுாரிகள், பள்ளிகளில் பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பத்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து, இக்கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
