/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் மாற்றுத்திறனாளி மாணவி சாதனை
/
சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் மாற்றுத்திறனாளி மாணவி சாதனை
சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் மாற்றுத்திறனாளி மாணவி சாதனை
சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் மாற்றுத்திறனாளி மாணவி சாதனை
ADDED : ஆக 07, 2025 02:48 AM

விழுப்புரம்: சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், மாற்றுத்திறனாளி மாணவி வெள்ளி, வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
திண்டிவனம் அடுத்த பேராவூரை சேர்ந்தவர் வாசுதேவன் மகள் சோபிதா, 12; மாற்றுத்திறனாளி. திண்டிவனம் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றார்.
செஸ் போட்டியில் ஆர்வமுள்ள இவர், மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வருகின்றார்.
ஆந்திரா மாநிலம், விஜய நகரத்தில் கடந்த ஜூன் 24 முதல் 29ம் தேதி வரை நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான செஸ் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்று, உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதை தொடர்ந்து, கடந்த ஜூலை 21 முதல் 31ம் தேதி வரை கோவாவில் நடந்த 15 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு போட்டியில் இந்திய அணி சார்பில் சோபிதா பங்கேற்றார்.
இதில், இரண்டு வெள்ளி பதக்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதையடுத்து, சோபிதா, விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மானை சந்தித்து வாழ்த்து பெற்றார் .