/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாற்றுத்திறனாளி மாணவர் நீச்சல் போட்டியில் சாதனை
/
மாற்றுத்திறனாளி மாணவர் நீச்சல் போட்டியில் சாதனை
ADDED : அக் 22, 2025 11:08 PM

விக்கிரவாண்டி: மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் மாற்றுத்திறனாளி மாணவர் முதலிடம் பிடித்தார்.
விக்கிரவாண்டி வட்டம், மண்டகப்பட்டு கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் செல்வ கண்ணன்,16; இவர் முட்டத்துார் ஒய்காப் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவரது தந்தை அண்ணாதுரை, விவசாய கிணறு, ஏரி, குளங்களில் செல்வ கண்ணனுக்கு நீச்சல் பயிற்சி அளித்தார்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த செப்டம்பரில் நடந்த தமிழக முதல்வர் கோப்பைக்கான நீச்சல் போட்டியில், 17 வயதுக்குட்பட்ட பிரிவில், பங்கேற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
அவருக்கு மாவட்ட விளையாட்டுஅலுவலர் ஆழிவாசன் பாராட்டு சான்று வழங்கினார். வெற்றி பெற்ற மாணவரை சிலம்பம் பயிற்சியாளர் சுரேந்தர், பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார் உள்ளிட்டோர் பாராட்டினர்.