/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டேபிள் டென்னீஸ் போட்டி பள்ளி மாணவர்கள் அசத்தல்
/
டேபிள் டென்னீஸ் போட்டி பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : அக் 22, 2025 11:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: முதல்வர் கோப்பை டேபிள் டென்னீஸ் போட்டியில் பள்ளி மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்து அசத்தினர்.
விழுப்புரம், கணபதி டேபிள் டென்னீஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற ஜான்டூவி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அப்துல்,14; சரவணன்,11; ஆகியோர் சென்னையில் நடந்த முதல்வர் கோப்பைக்கான, டேபிள் டென்னீஸ் போட்டியில், 14 வயது இரட்டையர் பிரிவில் பங்கேற்று மூன்றாம் இடத்தை பிடித்து, பரிசுத்தொகை ரூ.50 ஆயிரம் வென்றனர்.
இந்த மாணவர்களை பயிற்சியாளர் கார்த்திகேயன், கூடுதல் உதவி கருவூலக அலுவலர் கோவிந்தராஜன், கணக்காளர் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் பாராட்டினர்.