/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்கேட்டிங் பயிற்சிக்கு இடம் இல்லாததால் போட்டியில் பங்கேற்க முடியாமல் ஏமாற்றம்
/
ஸ்கேட்டிங் பயிற்சிக்கு இடம் இல்லாததால் போட்டியில் பங்கேற்க முடியாமல் ஏமாற்றம்
ஸ்கேட்டிங் பயிற்சிக்கு இடம் இல்லாததால் போட்டியில் பங்கேற்க முடியாமல் ஏமாற்றம்
ஸ்கேட்டிங் பயிற்சிக்கு இடம் இல்லாததால் போட்டியில் பங்கேற்க முடியாமல் ஏமாற்றம்
ADDED : நவ 13, 2025 10:41 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஸ்கேட்டிங் விளையாட்டு பயிற்சி பெறும் வீரர்களுக்கு மாநில போட்டிக்கு பயிற்சி பெற களமில்லாததால் சிரமப்படுகின்றனர்.
தமிழகத்தில் விளையாட்டு பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு மாநில அரசு தேவையான வசதிகளும், நிதியுதவிகளை அளித்து வருகிறது.
இதில், விழுப்புரத்தில் ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில், சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் மாணவ, மாணவிகள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த பயிற்சி பெற, ஸ்கேட்டிங் வட்ட அளவி லான ரிங்குகள் (வளையம்) வேண்டும்.
இந்த வளையங்களில் மட்டுமே ரோலர் ஸ்கேட்டிங் போட்டிக்கு மாணவ, மாணவிகள் செல்ல பயிற்சியாளர்கள் பயிற்சி வழங்குவர். இந்த ஸ்கேட்டிங் பயிற்சி களம், விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்கா வளாகத்தில் தற்போது உள்ளது.
இங்கு, 50 மீட்டர் அளவிற்கு மட்டுமே ரிங் உள்ளது. இந்த ரிங்கில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியில் மட்டுமே பங்கேற்க முடிகிறது. இதில், வென்று மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெறும் மாணவர்கள், ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சிக்கு 200 மீட்டர் ரிங் தேவைப்படுகிறது.
இதற்கான களம் இங்கில்லாததால், விழுப்புரம் மாணவ, மாணவிகள், ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி பெற, புதுச்சேரி, லாஸ்பேட்டை பகுதியில் உள்ள ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்திற்கு செல்கின்றனர். அங்கும், அந்த மாநிலத்தில் உள்ள ரோலர் ஸ்கேட்டிங் கிளப்பில் பதிவு செய்துள்ள மாணவ, மாணவிகள் பயிற்சி பெறுவதால், விழுப்புரம் மாணவ, மாணவிகளுக்கு அந்த வாய்ப்புகளும் கிடைப்பதில்லை.
இதனால் இங்குள்ள ரோலர் ஸ்கேட்டிங் மாணவ, மாணவிகள் மாநில போட்டியில் வெல்ல திறமை இருந்தும் பயிற்சி பெற வழியின்றி வெல்லும் வாய்ப்புகளை இழக்கின்றனர். விளையாட்டு மாணவ, மாணவிகளுக்கு போதிய வசதிகளை செய்து தரும் மாநில அரசு, ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு மாணவர்கள் பயிற்சி பெற 200 மீட்டர் ரிங் களத்தை ஏற்பாடு செய்து தருவதற்கான இடவசதியை செய்து தர வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

