/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நெற்பயிருக்கு காப்பீடு நாளை கடைசி நாள்
/
நெற்பயிருக்கு காப்பீடு நாளை கடைசி நாள்
ADDED : நவ 13, 2025 10:41 PM
விழுப்புரம்: நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நாளை 15ம் தேதி கடைசி நாள் என அறிவுறுத்தப்பட் டுள்ளது.
இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பயிர் இழப்பை ஈடுசெய்ய மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டு சாகுபடி செய்யும் காரீப், சிறப்பு (சம்பா) மற்றும் ராபி பருவத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நெல்-, உளுந்து, வேர்க்கடலை, எள், கரும்பு ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில், நெல் பயிருக்கு நவ., 15ம் தேதிக்குள் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக, நடப்பு பசலி பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்குப் புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் பதிவு செய்ய வேண்டும்.
நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் பெயர், நிலப்பரப்பு, சர்வே எண், உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து விவசாயிகள் பதிவு செய்து பயன்பெறலாம்.

