/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீடு புகுந்து திருட்டு : போலீஸ் விசாரணை
/
வீடு புகுந்து திருட்டு : போலீஸ் விசாரணை
ADDED : நவ 13, 2025 10:41 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, வெள்ளி பொருட்கள், லேப்டாப்பை திருட்டிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம், ஆடல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன், 59; இவர், கடந்த 9ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு, கடலுாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே அறையில் பீரோவில் ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் லேப் டாப் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார், வீட்டிற்கு சென்று தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.
பாண்டியன் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

