/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்தில் அதிருப்தி கவுன்சிலர்கள் பிரதான கட்சியில் இணைய திட்டம்? கட்சித் தலைமை முடிவுக்காக 'வெயிட்டிங்'
/
திண்டிவனத்தில் அதிருப்தி கவுன்சிலர்கள் பிரதான கட்சியில் இணைய திட்டம்? கட்சித் தலைமை முடிவுக்காக 'வெயிட்டிங்'
திண்டிவனத்தில் அதிருப்தி கவுன்சிலர்கள் பிரதான கட்சியில் இணைய திட்டம்? கட்சித் தலைமை முடிவுக்காக 'வெயிட்டிங்'
திண்டிவனத்தில் அதிருப்தி கவுன்சிலர்கள் பிரதான கட்சியில் இணைய திட்டம்? கட்சித் தலைமை முடிவுக்காக 'வெயிட்டிங்'
ADDED : ஜன 09, 2024 01:06 AM
திண்டிவனம் நகராட்சியில் அமைச்சர் மஸ்தானுக்கு எதிராக உள்ள 13 தி.மு.க.,கவுன்சிலர்கள் கடந்த 6 மாதங்களாக தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த அணியினர் கருணாநிதி நுாற்றாண்டு பிறந்த நாள் விழா, நினைவு நாள் விழா, ஸ்டாலின் பிறந்த நாள் விழா என அனைத்து நிகழ்ச்சிகளையும், தனியாக நடத்தி வருகின்றனர். இதேபோல் அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.
அமைச்சருக்கு எதிராp புகார் மனுவை, முதல்வர் ஸ்டாலினை 2 முறை நேரில் சந்தித்து கொடுத்துள்ளனர். இதே போல் அமைச்சர்கள் உதயநிதி, நேரு ஆகியோரிடமும் மனு கொடுத்தனர்.
கடைசி கட்டமாக கடந்த 4ம் தேதி செஞ்சியில் புதிய பஸ் நிலையம் திறப்பு விழாவிற்கு, திண்டிவனம் வழியாக சென்ற அமைச்சர் நேருவின் காரை வழிமறித்து, நகராட்சியில் தங்களை கடந்த 19 மாதங்களாக புறக்கணித்து, எந்த பணியும் வழங்கவில்லை. திண்டிவனம் தி.மு.க.,வை காப்பாற்றுங்கள் என நகர பொருளாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் சின்னசாமி மற்றும் கவுன்சிலர்கள் (அமைச்சர் மஸ்தான் உடன் இருந்த போதே) கோரிக்கை வைத்து பரபரப்பை ஏற்படுத்தினர். இப்படி புலம்பியும் இதுவரை கட்சித் தலைமை 13 கவுன்சிலர் அணி தரப்பினரிடம் என்ன பிரச்னை என காது கொடுத்து கூட கேட்கவில்லை.
இதற்கிடையில் திண்டிவனம் நகராட்சியில் அதிருப்பதி கவுன்சிலர்கள் அணியினரை, பிரதான கட்சிகளான அ.தி.மு.க., - பா.ஜ.,நிர்வாகிகள் தங்கள் பக்கம் இழுப்பதற்கு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மதியழகன் மீதுள்ள அதிருப்தி காரணமாக, பர்கூர் ஒன்றியத்தைச் சேர்ந்த தி.மு.க.,வின் 9 கவுன்சிலர்கள், அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்து விட்டனர்.
இதே போல் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த அதிருப்தி தி.மு.க.,கவுன்சிலர்களும் பிரதான கட்சியில் இணையப் போவதாக திண்டிவனம் பகுதியில் செய்திகள் இறக்கை கட்டி பறக்கின்றன.
இதுபற்றி அதிருப்தியாளர்கள் தரப்பில் கேட்ட போது, 'வரும் 21ம் தேதி சேலத்தில் தி.மு.க.,இளைஞர் அணி மாநில மாநாடு நடைபெற உள்ளது. மாநாடு முடிந்த பிறகு, எங்கள் பிரச்னை பற்றி கட்சி தலைமை நல்ல முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கிறோம். கட்சி தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் அதிரடியாக வேறு ஒரு முடிவு எடுக்கப்படும்' என்றனர்.