/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் தலையீடு போலீசார் மத்தியில் அதிருப்தி
/
பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் தலையீடு போலீசார் மத்தியில் அதிருப்தி
பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் தலையீடு போலீசார் மத்தியில் அதிருப்தி
பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் தலையீடு போலீசார் மத்தியில் அதிருப்தி
ADDED : நவ 12, 2024 06:17 AM
மாவட்ட எல்லை யோரம் உள்ள ஒரு காவல் நிலையத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் பயிற்சி சப்இன்ஸ்பெக்டர் ஒருவர் பணிக்கு வந்தார்.
அவரது சொந்த ஊர் காவல் நிலையம் அருகிலேயே இருப்பதால் அனைத்து தரப்பினருடனும் அவர் மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டார்.
இதனால் புகார் கொடுக்க வருபவர்கள் பயிற்சி சப் இன்ஸ்பெக்டரையே தேடிவர ஆரம்பித்தனர்.
மேலும் கவல் நிலையத்திற்கு வரும் புகார்களை பிற போலீசார் விசாரணை செய்தால், அதில் பயிற்சி சப் இன்ஸ்பெக்டரின் தலையீடு இருப்பதால், புகாரை சரியான முறையில் விசாரணை செய்ய முடியவில்லை என சக போலீசார் புலம்பி வருகின்றனர்.
இந்த காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு தீபாவளியின் போது ஸ்வீட், பட்டாசு கொடுப்பதற்காக கல்குவாரி உரிமையாளர்கள் ஸ்வீட், பட்டாசு பாக்ஸ் வைத்திருந்துள்ளனர்.
அப்போது அந்த பகுதிக்குச் சென்ற பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் அனுமதியின்றி பட்டாசு பாக்ஸ் வைத்திருந்ததாக கூறி 100க்கும் மேற்பட்ட பட்டாசு பாக்ஸ்களை எடுத்து வந்துள்ளார்.
ஆனால் அந்த பட்டாசு பாக்ஸ்சுகளை காவல் நிலையத்தில் ஒப்படைக்காததால் சக போலீசார் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் காவல் நிலையத்திற்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால், ஒரு சில போலீசார் வேறு காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் கேட்கப்போவதாக கூறி வருகின்றனர்.