/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விநியோகம்: 5 ஆண்டுகளில் 56,757 ரேஷன் கார்டுகள்... விசாரணையில் 1,253 மனுக்கள்
/
விநியோகம்: 5 ஆண்டுகளில் 56,757 ரேஷன் கார்டுகள்... விசாரணையில் 1,253 மனுக்கள்
விநியோகம்: 5 ஆண்டுகளில் 56,757 ரேஷன் கார்டுகள்... விசாரணையில் 1,253 மனுக்கள்
விநியோகம்: 5 ஆண்டுகளில் 56,757 ரேஷன் கார்டுகள்... விசாரணையில் 1,253 மனுக்கள்
ADDED : ஜூன் 26, 2025 11:45 PM

விழுப்புரம் மாவட்டத்தில் 9 தாலுகாக்களில் 1,254 ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. இதில், செஞ்சி தாலுகாவில் 89 ஆயிரத்து 794 ரேஷன் கார்டுதாரர்கள், கண்டாச்சிபுரம் தாலுகாவில் 45 ஆயிரத்து 111, மரக்காணம் தாலுகாவில் 36 ஆயிரத்து 26, மேல்மலையனுார் தாலுகாவில் 42 ஆயிரத்து 273 கார்டுதாரர்கள் உள்ளனர்.
மேலும், திருவெண்ணெய்நல்லுார் தாலுகாவில் 45 ஆயிரத்து 824 ரேஷன் கார்டுகள், திண்டிவனம் தாலுகாவில் ஒரு லட்சத்து 1,005, வானுார் தாலுகாவில் 54 ஆயிரத்து 117, விக்கிரவாண்டி தாலுகாவில் 84 ஆயிரத்து 107, விழுப்புரம் தாலுகாவில் 1 லட்சத்து 29 ஆயிரத்த 423 ரேஷன் கார்டுதாரர்கள் என மொத்தம் 6 லட்சத்து 27 ஆயிரத்து 680 கார்டுதாரர்களுக்கு அத்தியவாசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
இதில், அரிசி கார்டுதாரர்கள் 5 லட்சத்த 51 ஆயிரத்து 830 பேரும், சக்கரை கார்டுதாரர்கள் 2,083 பேரும், போலீஸ் கார்டுகள் 1,587 பேரும், எந்த பொருட்களும் வாங்காதோர் 337 பேரும் உள்ளனர்.
இது தவிர, அந்தியோஜனா கார்டுதாரர்கள் 67 ஆயிரத்து 556 பேரும், முதியோர் ஓய்வூதியம் பெறும் கார்டுதாரர்கள் 4,197 பேரும் உள்ளனர்.
புதிய ரேஷன் கார்டு கேட்டு ஒருவர் குடிமை பொருள் வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பம் செய்தால், 15 நாட்களுக்குள் விசாரணை செய்து அந்த நபருக்கு அரசின் விதிமுறைப்படி புதிய ரேஷன்கார்டு வழங்க வேண்டும்.மாவட்டத்தில், கடந்த 2021, 2022ம் ஆண்டுகளில் புதிதாக விண்ணப்பித்த 37 ஆயிரத்து 327 பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. அதே போல், 2023ம் ஆண்டு முதல் இந்தாண்டு மே மாதம் வரை, 19 ஆயிரத்து 430 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் என 5 ஆண்டுகளில் 56 ஆயிரத்து 757 பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக, புதிதாக ரேஷன் கார்டு கேட்டு அந்தந்த தாலுகாவில் விண்ணப்பித்த 1,253 பேரின் மனுக்கள் விசாரணை நிலையில் உள்ளது.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் துறை அலுவலர்கள் தரப்பில் கூறுகையில், 'புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்தோருக்கு, 15 நாட்களில் விசாரணை செய்து கார்டு வழங்க வேண்டும். மாவட்டத்தில், 1,253 பேரின் புதிய ரேஷன் கார்டு கேட்டு மனுக்கள், அந்தந்த தாலுகாவில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரின் விசாரணை நிலையில் உள்ளது.
விசாரணை முடித்து, அந்த முடிவை கலெக்டருக்கு அனுப்புவர். கலெக்டர் அதில் கையெழுத்திட்ட பின், மாவட்ட வழங்கல் துறை மூலம் புதிய ரேஷன் கார்டுகள் தயார் செய்து, உரியோருக்கு வழங்க அந்தந்த தாலுகா வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைக்கப்படும்' என்றனர்.
அதிகாரிகள் விரைந்து விசாரணை செய்து, உரியவர்களுக்கு விரைவாக ரேஷன் கார்டு வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

