/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விவசாயிகளுக்கு நெல் விதைகள் வினியோகம்
/
விவசாயிகளுக்கு நெல் விதைகள் வினியோகம்
ADDED : அக் 01, 2025 11:04 PM

வானுார்: திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் சம்பா பட்ட நெல் விதைகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சீனிவாசன் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு சம்பா பருவத்திற்கான மானிய விலையில் ரகம் ஆடுதுறை-39 நெற்பயிர்களை வழங்கினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 78,425 எக்டர் பரப்பில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், சம்பா நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் கிலோ விதைக்கு ரூ. 20 மானிய விலையில் நெல் விதைகள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக சம்பா பருவத்திற்கு தேவையான நெல் ரகமான பாபட்லால்-5204; ஆடுதுறை -39; ஆடுதுறை-54; என, மத்திய கால ரகங்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ், உதவி வேளாண்மை அலுவலர்கள் மஞ்சு, மகாலட்சுமி, பஞ்சநாதன், விஜயலட்சுமி, ஆத்மா திட்ட அலுவலர்கள் வாழ்வரசி, கோவிந்தசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.