/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கல்
/
மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கல்
ADDED : பிப் 04, 2024 04:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : உமையாள்புரம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் லோகாம்பாள் தலைமை தாங்கினார்.
அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் முன்னாள் தலைவர் ஜேசு ஜூலியஸ் ராஜா, துத்திபட்டு வி.ஏ.ஓ., புகழேந்தி ஆகியோர் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி மரங்களின் பயன், அவசியம் குறித்து விளக்கி பேசினர்.
ரோட்டரி செயலாளர் மதன்லால் சிங், முன்னாள் தலைவர் ரமேஷ், நிர்வாகிகள் சுபாஷ், நிர்மல் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.