/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பழனிவேலு பள்ளி மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
/
பழனிவேலு பள்ளி மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
பழனிவேலு பள்ளி மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
பழனிவேலு பள்ளி மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : செப் 24, 2024 12:11 AM

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் பழனிவேலு மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் வாசுகி முன்னிலை வகித்தார். மேலாளர் மஞ்சுளா வரவேற்றார். நிகழ்ச்சியில் தாளாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு 'தினமலர்- பட்டம்' இதழ் வழங்கி, மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை அறிவிலிருந்து, உயர் கல்வி கற்பது வரை 'தினமலர் - பட்டம்' இதழ் உதவும் என பேசினார்.
தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக திருவண்ணாமலை மண்டல தொடர்பு அலுவலர் ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
அலுவலக மேலாளர் செல்லம்மாள் நன்றி கூறினார்.