/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானூரில் சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் ஆய்வு
/
வானூரில் சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் ஆய்வு
ADDED : டிச 27, 2024 11:20 PM

வானூர், ; வானூர் ஒன்றியத்தில் வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு நடக்கும் சிறப்பு முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மழை வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு, புதிய சான்றிதழ் வழங்குவதற்கான முகாம், அந்தந்த ஒன்றியங்களில் நடந்து வருகிறது.
இதே போன்று வானூர் ஒன்றியம் உப்புவேலூர் கிராமத்தில் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமை கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.
அப்போது, புதிய ஆதார் அட்டை வேண்டி விண்ணப்பித்த நபருக்கு விண்ணப்பத்திற்கான ஒப்புதல் ரசீதை வழங்கினார்.
தாசில்தார் நாராயணமூர்த்தி உடனிருந்தார்.

