/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்ட வளர்ச்சிக்கான கண்காணிப்பு குழு கூட்டம்
/
மாவட்ட வளர்ச்சிக்கான கண்காணிப்பு குழு கூட்டம்
ADDED : பிப் 21, 2026 04:53 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் ரவிக்குமார் எம்.பி., தலைமை தாங்கினார். கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதமரின் குடியிருப்பு திட்டம், ஜன்ஜாதி ஆதிவாசி நியாயமகா அபியான் திட்டம், ஜல் ஜீவன் மிஷன், எம்.பி., உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுத்துவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் எம்.பி., கேட்டறிந்தார்.
மேலும், மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் மற்றும் பி.எம்., ஜன்மன் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்து நிறைவுபெற்றுள்ள பணிகளின் விவரம் மற்றும் புதிய தகுதியான பயனாளிகள் தேர்வு பட்டியல் விபரம் குறித்து கேட்டறிந்து கட்டுமானப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அப்போது, டி.ஆர்.ஓ., அரிதாஸ், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பத்மஜா, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

